அற இலக்கியங்களில் பொருளாதாரச் சிந்தனைகள்

Sivagami S
2019 சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் International Research Journal of Tamil  
Economy is important to run life as well as government. In other words, betterment of any individual as well a country depends on economy. 'Avvaiyaar' a Tamil poetess said 'when the conditions of the citizens raise automatically the status of the king raises.' 'ThirukkuRaL' in one of its chapters on 'poruL syal vahai' (means of economy) talks about the various ways through which the government can build its economy through righteous means. The other epic literatures too have the same opinion.
more » ... the same opinion. Man acts unethical in two conditions. One is poverty and the other is the desire for more wealth. Poverty is one of the factors of inequalities in economy. There are two status which encouragement to earn. One is poverty and the other is the unfulfilled desire for wealth. To fulfil either one, man tries to earn in unethical ways. Poor, because of their need, try unethical and theft is the foremost. வாழ்க்கையை நடத்துவதற்கும் அரசை நடத்துவதற்கும் இன்றியமையாததாக விளங்குவது பொருளாகும். பொருளை அடிப்படையாகக் கொண்டே ஒவ்வொரு தனிமனிதரின் மேம்பாட்டிலிருந்து நாட்டின் மேம்பாடு வரை சார்ந்திருக்கிறது. அதனால்தான் ஔவையார் 'குடியுயரக் கோனுயரும்' என்றுரைத்தார். பொருள் செயல்வகை அதிகாரத்தில் திருக்குறளானது பொருளை அறத்தின் அடிப்படையில் சேர்க்கும் வழிமுறைகளைக் கூறுகிறது. பிற அற இலக்கியங்களும் பொருள் சேர்த்தலை இதே போன்ற கருத்தைக் கொண்டிருக்கின்றன. பொருள் சேர்த்தலில் மனிதர்க்கு இரண்டு நிலைகளில்தான் அறமற்று செயல்படுகின்றனர் ஒன்று வறுமை. பிறிதொன்று பொருள்சேர்க்கும் ஆசை. வறுமை என்பது பொருளாதார ஏற்றத் தாழ்வின் காரணிகளில் ஒன்றாகும். "மனிதனைத் தவறான முறையில் பொருள் ஈட்ட ஊக்குவிப்பது இருநிலைப்படும். ஒன்று வறுமை. மற்றது நிறைவேறாத ஆசைப் பெருக்கு. இவ்விரண்டில் ஏதேனும் ஒன்று நிறைவுபெறும் பொருட்டு முறைகேடான அறம் சாராத செயலில் பொருள் ஈட்ட முனைகின்றான்"1 என்று குறிப்பிடும் இக்கூற்றானது. சமூகத்தில் இருநிலைப்பட்ட மனிதர்கள் இருப்பதையும் செல்வ வளம் மிக்கவர்களும் முறைகேடான வழியில் பொருள் ஈட்ட முனைவர் என்பதை வெளிப்படுத்துவதாக அமைகிறது. ஏழைகள் தம் நிலை காரணமாக முறையற்ற பொருளீட்டலில் ஈடுபடுவர் என்று குறிப்பிடுவதில் திருடுதல் போன்ற செயல்களே முன்னிற்கின்றன.
doi:10.34256/irjt1935 fatcat:gwlj42mslnelvohqv4as3ae4uu